ஸ்வீட்டி நாட்டி கிரேசி – திரைவிமர்சனம்
நாயகன் த்ரிகுண் மற்றும் நாயகி ஸ்ரீ ஜீத்தா கோஷ் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். நட்பாக தொடங்கும் உறவு, வழக்கமான காதல் பாதையில் நகர்கிறது. காதல் வலுப்பெறும் நிலையில், நாயகன் தனது கடந்தகால அனுபவங்களை வெளிப்படையாக நாயகி ஸ்ரீ ஜீத்தாவிடம் பகிர்கிறார்.
அதனைத் தொடர்ந்து இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்குப் பிறகு, கோத்தகிரியில் அமைந்துள்ள நாயகியின் வீட்டிற்கு செல்கிறார். அங்கு நாயகனுக்கு புதிய பிரச்சனை ஏற்படுகிறது.
இறுதியில் த்ரிகுண், ஶ்ரீ ஜீத்தா திருமண வாழ்க்கை எப்படி சென்றது? த்ரிகுண்-க்கு வந்த பிரச்சனை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் த்ரிகுண் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான உடல்மொழி மற்றும் வசனப் பேச்சில் இயல்பை காட்டுகிறார். பெண்களிடம் மாட்டிக்கொண்டு அவஸ்தை படும் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார். நாயகி ஸ்ரீ ஜீத்தா கோஷ் கவர்ச்சி மற்றும் உணர்ச்சி இரண்டையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.
கவர்ச்சியில் தாராளம் காண்பித்து இருக்கிறார் இனியா. சுந்தரா டிராவல்ஸ் ராதா இரட்டை அர்த்த வசனங்கள் பேசி கவனிக்க வைத்து இருக்கிறார். தம்பி ராமையா, சத்யன் ஆகியோரின் காமெடி காட்சிகள் படத்திற்கு பெரிய பலம்.
இயக்கம்
அடல்ட் காமெடி மற்றும் கவர்ச்சியை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் ராஜசேகர்.ஜி. படத்தின் ஜானரை தெளிவாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். கதையின் மையக்கரு பல இடங்களில் அதிர்ச்சி தரும் வகையில் இருந்தாலும், அதை லேசான அணுகுமுறையில் சொல்ல முயற்சி செய்யப்பட்டிருக்கிறது. இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் நேரடி வசனங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளதால், இது எல்லா தரப்பினருக்கும் பொருந்தாது.
ஒளிப்பதிவு
விஜய்யின் ஒளிப்பதிவில் மூன்று நாயகிகளையும் அழகாக காண்பித்து இருக்கிறார்.
இசை
அருணகிரியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்.
ரேட்டிங்-2.5/5