புதுச்சேரியில் 1.3 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
- வரைவு வாக்காளர் பட்டியல்படி தற்போது புதுச்சேரி மாநிலத்தில் 9.18 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
- காரைக்கால் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் குலோத்துங்கன் இன்று வெளியிட்டார்.
புதுச்சேரியில் 16,171 வாக்காளர்கள் இறந்து விட்டதாகவும், 45,312 வாக்காளர்கள் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்து விட்டதாகவும், 22,077 வாக்காளர்கள் குறிப்பிட்ட விலாசத்தில் இல்லாதவர்களாகவும், 1627 வாக்காளர்கள் ஏற்கனவே வேறு சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களாகவும் மற்றும் 344 வாக்காளர்கள் வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது. மொத்தம் 85,531 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காரைக்கால் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 17,936 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதன்படி புதுச்சேரி மாநிலம் முழுவதும் மொத்தம் 1,03,467 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியல்படி தற்போது புதுச்சேரி மாநிலத்தில் 9.18 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.