புதுச்சேரி

ஆளுநர் - முதலமைச்சர் மோதலால் மக்கள் பணம் வீணடிப்பு: புதுச்சேரி முன்னாள் ஆளுநர் குற்றச்சாட்டு

Published On 2026-02-06 11:26 IST   |   Update On 2026-02-06 11:26:00 IST
  • புதுச்சேரியில் நிறைய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க வேண்டும்.
  • மது மீதான வரியை அதிகரித்தால், அரசின் வருவாய் கூடுவதோடு, மது அருந்தி உடல் நலம் பாதிக்கப்படுவது குறையும்.

புதுச்சேரி:

புதுச்சேரியில் தனியார் நடத்திய நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுநர் கிரண்பேடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

புதுச்சேரி மாநிலம் கல்வி, சுகாதார துறைகளில் முன்னோடியாக உள்ளது. சிறிய மாநிலம், மக்கள்தொகை குறைவாக இருந்தாலும் இங்கு ஏராளமான கல்லி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளன.

இருந்தாலும் திறன் மேம்பாட்டு துறையில் பின்தங்கி இருக்கிறது. அரபிந்தோ ஆசிரமத்தில் உற்பத்தியாகும் அகர்பத்தியை தவிர வேறு எந்த உற்பத்தியும் இல்லை.

புதுச்சேரியில் நிறைய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்க வேண்டும். வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலைவாய்ப்பினை ஏற்படுத்து பவர்களாக புதுச்சேரி இளைஞர்கள் மாற வேண்டும். மத்திய அரசின் வருவாயை பெரிதும் சார்ந்து நிற்கிறோம்.

இதில் பெரும்பாலும் அரசின் ஊழியர் சம்பளம் பென்ஷனுக்கு செலவிடப்படுகிறது. எனவே புதுச்சேரியின் வருவாய் உயர்த்தப்பட வேண்டும். இலவசங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது, மது வகைகள் மீதான வரி குறைப்பு ஆகியன தேவையற்றவை.

மது மீதான வரியை அதிகரித்தால், அரசின் வருவாய் கூடுவதோடு, மது அருந்தி உடல் நலம் பாதிக்கப்படுவது குறையும். இதனால் அரசின் மருத்துவ செலவுகள் ஒரு பக்கம் குறையும்.

ஆளுநரும், முதலமைச்சரும் மோதலின்றி பணியாற்ற வேண்டும் என்றால் இருவருக்கும் மக்கள் நலம் என்ற ஒற்றை குறிக்கோள் இருக்க வேண்டும். அப்போது தான் மோதல் ஏற்படாது. ஆளுநர், முதலமைச்சர் மோதலால் மக்கள் பணம் தான் வீணடிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News