செய்திகள்

அரூர் அருகே முருக பக்தர்கள் சென்ற வேன் கவிழ்ந்தது- டிரைவர் உள்பட 3 பேர் காயம்

Published On 2018-12-31 12:28 GMT   |   Update On 2018-12-31 12:28 GMT
அரூர் அருகே முருக பக்தர்கள் சென்ற வேன் நிலை தடுமாறி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர்.
அரூர்:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த முருக பக்தர்கள் அறுபடைவீடு முருகன் கோவில்களுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். இதற்காக ஒரு வேனில் 21 பக்தர்கள் பெருந்துறையில் இருந்து புறப்பட்டு திருத்தணி முருகன் கோவிலுக்கு சென்று கொண்டு இருந்தனர்.

இன்று அதிகாலை தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த தீர்த்தமலை அருகே உள்ள ஆண்டியூர் என்ற பகுதியில் செல்லும்போது வேன் நிலை தடுமாறி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் மூர்த்தி (வயது 51) என்ற பக்தருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. காளிதாஸ் மற்றும் டிரைவர் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இவர்கள் அரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கோட்டப்பட்டி, சின்னாங்குப்பம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் இளங்கோணி ஆகிய பகுதிகளில் இருந்து மூன்று 108 ஆம்புலன்சுகள் வந்து காயம் அடைந்த பக்தர்களை ஏற்றி அரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
Tags:    

Similar News