செய்திகள்

மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் இழைத்துள்ளது- அன்புமணி ராமதாஸ்

Published On 2018-12-22 12:00 GMT   |   Update On 2018-12-22 12:00 GMT
மேகதாது அணை பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் இழைத்துள்ளது என்று அன்புமணி ராமதாஸ் கூறினார். #PMK #AnbumaniRamadoss #CentralGovt
ஈரோடு:

ஈரோடு கள்ளுக்கடை மேட்டில் உள்ள நீல்கிரிஸ் உள்விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான இறகு பந்து போட்டி நடந்து வருகிறது.

இதில் 35 வயது முதல் 70 வயது பிரிவில் வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள். இன்று கால் இறுதி போட்டிகள் நடந்தது.

இதில் தமிழ்நாடு பேட் மிட்டன் அசோசியேஷன் தலைவரும், பா.ம.க. மாநில இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு விளையாடினார்.

முன்னதாக அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மேகதாது அணை பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் இழைத்துள்ளது. சிவகாசி பட்டாசு தொழிற்சாலை விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உயர்மின் அழுத்த கோபுரம் அமைப்பதற்கு எதிராக விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு பா.ம.க முழு ஆதரவு தெரிவிக்கிறது. பூமிக்கு அடியில் கேபிள் வழியாக மின்சாரம் கொண்டு செல்ல வேண்டும்.


ஸ்டெர்லைட் ஆலையை பொறுத்த வரை அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் தேதி அறிவித்த பின் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கால் இறுதி இரட்டையர் பிரிவு போட்டியில் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான அணியினர் வெற்றி பெற்றனர். #PMK #AnbumaniRamadoss #CentralGovt
Tags:    

Similar News