சினிமா செய்திகள்
null

தவெக 18வது வார்டு செயலாளர்.. தாய் கிழவி டிரெய்லர் வெளியானது!

Published On 2026-02-23 18:08 IST   |   Update On 2026-02-23 18:08:00 IST
  • படம் வரும் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.
  • கமல்ஹாசன் படத்தை பாராட்டியுள்ளார்.

அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகை ராதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளப் படம் தாய் கிழவி. இப்படத்தை சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் பேஸன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் ராதிகாவுடன் சிங்கம் புலி, அருள்தாஸ், பால சரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

உசிலம்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தைச் சுற்றியுள்ள நகைச்சுவையான நிகழ்வுகளே படத்தின் கதை. இப்படம் வரும் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இதன் டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது. இப்படத்தை பார்த்து சமீபத்தில் கமல்ஹாசன் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. 

Full View


 

Tags:    

Similar News