சினிமா செய்திகள்
null

காந்தாரா நாயகன் ரிஷப் ஷெட்டியின் 'ஜெய் ஹனுமான்'.. பூஜையுடன் படப்பிடிப்பு துவக்கம்

Published On 2026-02-23 04:15 IST   |   Update On 2026-02-23 04:15:00 IST
அனுமன் பிறந்த இடமாகக் கருதப்படும் அஞ்சனாத்ரி பெட்டாவில் பூஜை செய்தனர்.

2022-ல் வெளியாகி நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த கன்னட படம் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா'.

இதன் முன்கதையாக கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியான 'காந்தாரா சாப்டர் 1' உலக அளவில் சுமார் 855 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இந்நிலையில் ரிஷப் ஷெட்டி நாயகனாக நடிக்க உள்ள புதிய படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது.

'ஜெய் ஹனுமான்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ரிஷப் ஷெட்டி ஹனுமானாக நடிக்க உள்ளார்.

'ஜெய் ஹனுமான்' படத்தை, கடந்த 2024 இல் 'ஹனுமான்' என்ற படத்தை எடுத்து கவனம் பெற்ற தெலுங்கு இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்க உள்ளார். உயர்தர கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் இப்படம் உருவாக உள்ளது. 

கர்நாடக மாநிலம் ஹம்பி அருகே, அனுமன் பிறந்த இடமாகக் கருதப்படும் அஞ்சனாத்ரி பெட்டாவில் நேற்று ஜெய் ஹனுமான் படக்குழு சிறப்பு பூஜை செய்து படப்பிடிப்பை தொடங்கியது.

இதில் ரிஷப் ஷெட்டி தனது மனைவி பிரகதி ஷெட்டியுடன் கலந்து கொண்டார். இயக்குனர் பிரசாந்த் வர்மா மற்றும் தயாரிப்பாளர்கள் பங்கேற்றனர்.

மைத்திரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். கௌரா ஹரி இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

தெலுங்கு மட்டுமின்றி தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளது.   

Tags:    

Similar News