சினிமா செய்திகள்

2 முறை தற்கொலை முயற்சி - KGF பட இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் ஓபன் டாக்!

Published On 2026-02-23 15:50 IST   |   Update On 2026-02-23 15:50:00 IST
  • KGF படத்தில் இவரின் இசை இந்திய அளவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
  • 2 முறை தற்கொலை முயற்சி செய்துள்ளதாக ரவி பஸ்ரூர் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் KGF படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். KGF படத்தில் இவரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இந்திய அளவில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில், தான் 2 முறை தற்கொலை முயற்சி செய்துள்ளதாக ரவி பஸ்ரூர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பேட்டி ஒன்றில் பேசிய ரவி பஸ்ரூர், "எனக்கு 18 வயது இருக்கும்போது 2 முறை உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்துள்ளேன். 2வது முறை ஒருவர் என்னை காப்பாற்றி கீபோர்ட் வாங்குவதற்காக எனக்கு ரூ.35,000 கொடுத்தார். அவர்தான் ரவி. அதையே என் பெயருக்கு முன் சேர்த்து ரவி பஸ்ரூர் என வைத்துக் கொண்டேன்" என்று தெரிவித்தார். 

Tags:    

Similar News