செய்திகள்

விமானத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்கம் கடத்திய சென்னை வாலிபர் சிக்கினார்

Published On 2018-12-21 09:05 GMT   |   Update On 2018-12-21 09:05 GMT
மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்திய வாலிபரை கைது செய்த போலீசார் அவருக்கு உதவிய ஊழியரையும் கைது செய்தனர். #ChennaiAirport
ஆலந்தூர்:

மலேசியாவில் இருந்து சென்னைக்கு நேற்று நள்ளிரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனை நடத்தினர்.

அப்போது சென்னையை சேர்ந்த வாலிபர் முகமது அக்கீல் என்பவர் மறைத்து கொண்டுவந்த பார்சலை அதிகாரிகளுக்கு தெரியாமல் விமான நிலையத்தில் பணியாற்றும் தனியார் ஒப்பந்த ஊழியரான முனீர் என்பவரிடம் கொடுத்தார்.

இதனை கவனித்த அதிகாரிகள் 2 பேரையும் தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தினார். இதில் அந்த பார்சலில் 500 கிராம் தங்கம் கடத்தி கொண்டுவரப்பட்டு இருப்பது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.

பிடிபட்ட முகமது அக்கீல் கூறும்போது, கடத்தல் தங்கத்தை விமானநிலைய ஒப்பந்த ஊழியர் முனீரிடம் கொடுத்துவிட்டு பின்னர் அதனை விமான நிலையத்துக்கு வெளியே பெற்றுக்கொள்ள இருந்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து ஒப்பந்த ஊழியர் முனீரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சர்வதேச தங்கம் கடத்தல் கும்பலுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடக்கிறது.

இதேபோல துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த ஹைத்ரூஷ் என்பவர் லேப்-டாப்பில் மறைத்து கடத்தி வந்த 175 கிராம் தங்கம் சிக்கியது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்

மேலும் ஆவணம் இன்றி கொண்டு வந்த 7 லேப்- டாப்பையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #ChennaiAirport
Tags:    

Similar News