சினிமா செய்திகள்

தயாரிப்பாளர்களுக்கு துணிச்சல் இல்லை- மாளவிகா மோகனன்

Published On 2026-01-22 10:08 IST   |   Update On 2026-01-22 10:08:00 IST
  • லோகா' என்ற மலையாள படம் இந்திய அளவில் கவனம் ஈர்த்தது.
  • கல்யாணி மீது தயாரிப்பாளர்கள் துணிந்து வைத்த நம்பிக்கையே இதற்கு காரணம்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வரும் மாளவிகா மோகனன், கவர்ச்சியால் ரசிகர்களை தன் வசம் கட்டிப்போட்டும் வைத்திருக்கிறார்.

இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசிய கருத்துகள் திரையுலகில் கவனம் ஈர்த்துள்ளன.

அதில், "கல்யாணி பிரியதர்ஷன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த 'லோகா' என்ற மலையாள படம் இந்திய அளவில் கவனம் ஈர்த்தது. வசூலிலும் பட்டையை கிளப்பியது. கல்யாணி மீது தயாரிப்பாளர்கள் துணிந்து வைத்த நம்பிக்கையே இதற்கு காரணம். ஆனால், பெரும்பாலான தயாரிப்பாளர்கள் இதுபோன்ற பெரிய 'பட்ஜெட்' படங்களில் ஒரு பெண்ணை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கத் துணிவதில்லை. இந்த நிலை மாறினால் சினிமாவுக்கு இன்னும் நல்லது" என்று மாளவிகா மோகனன் குறிப்பிட்டிருந்தார்.

Tags:    

Similar News