செய்திகள்

தயாரிப்பாளர்களை நஷ்டத்தில் தள்ளியவர் மக்களையும் கஷ்டத்தில் தள்ள பார்க்கிறார்- கமல் மீது அமைச்சர் தாக்கு

Published On 2018-10-17 04:21 GMT   |   Update On 2018-10-17 04:21 GMT
தயாரிப்பாளர்கள் பலரை நஷ்டத்தில் தள்ளியவர் மக்களையும் கஷ்டத்தில் தள்ளப்பார்ப்பதாக கமல்ஹாசன் மீது அமைச்சர் கருப்பண்ணன் குற்றம்சாட்டியுள்ளார். #ADMK #KCKaruppannan #KamalHaasan
ஈரோடு:

ஈரோடு அடுத்த சித்தோட்டில் உள்ள மாவட்ட ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.

இதில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

மறைந்த நமது ஜெயலலிதா சொன்னதை போல் இன்னும் 100 ஆண்டுகள் இந்த ஆட்சி தொடர்ந்து நீடிக்கும். அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி நாட்டை குட்டி சுவராக்கி விட்டார்கள் என்று கமலஹாசன் பேசி வருகிறார். ஜெயலலிதா இருந்திருந்தால் அவர் இப்படி பேசுவாரா? தயாரிப்பாளர்கள் பலரை நஷ்டத்தில் ஆளாக்கி நடுத்தெருவுக்கு கொண்டு சென்றவர். நடிகர் கமல்ஹாசன் இன்று மக்களை கஷ்டத்தில் தள்ள பார்க்கிறார். மக்கள் அவரை நம்பமாட்டார்கள்.


முதல்வர் மீது சி.பி.ஐ. விசாரணை உள்ளதால் அவர் பதவி விலக வேண்டும் என்கிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இதுவரை குற்றம் நிரூபிக்கப்படவில்லை. இதனால் முதல்- அமைச்சர் எடப்படி பழனிசாமி பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை.

இந்த அரசு மீது அபாண்டமாக பழி கூறி தான் முதல்- அமைச்சர் ஆக வேண்டும் என மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். அவரால் இனி ஒரு போதும் தமிழகத்தில் முதல்வராக முடியாது.

இவ்வாறு அமைச்சர் கருப்பணன் கூறினார். #ADMK #TNMinister #KCKaruppannan #KamalHaasan
Tags:    

Similar News