இந்தியா

பிரிவுக்கான காரணம் என்ன? மேரி கோம் - முன்னாள் கணவர் இடையே வெடிக்கும் வார்த்தைப்போர்!

Published On 2026-01-13 21:12 IST   |   Update On 2026-01-13 21:12:00 IST
  • முன்னாள் கணவர், மேரி கோம் கடந்த காலங்களில் தமக்குத் துரோகம் செய்ததாக தெரிவித்துள்ளார்.
  • நிதி தொடர்பான அனைத்து புகார்களும் பொய்யானவை என்றும் ஓன்லர் திட்டவட்டம்

குத்துச்சண்டையில் ஆறுமுறை உலக சாம்பியன் பட்டம் வென்றவர் இந்திய வீராங்கனை மேரி கோம். மேரி கோமிற்கு 4 குழந்தைகள் உள்ளனர். அவரது கணவர் ஓன்லர் கோம். இந்த தம்பதி கடந்த 2023ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றுப் பிரிந்தனர். இதனிடையே சமீபத்தில் விவாகரத்து குறித்துப் பேசியிருந்த மேரி கோம், தனது முன்னாள் கணவர் தன்னை பணரீதியாக ஏமாற்றியதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மேரி கோமின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள அவரது முன்னாள் கணவர், மேரி கோம் கடந்த காலங்களில் தமக்குத் துரோகம் செய்ததாக தெரிவித்துள்ளார். மேரி கோம் 2013-ல் ஒரு ஜூனியர் குத்துச்சண்டை வீரருடனும், 2017 முதல் வேறொருவருடனும் உறவில் இருந்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் மேரி கோமின் கோடிக்கணக்கான பணத்தையோ அல்லது சொத்துக்களையோ தான் ஏமாற்றவில்லை என்றும், அவர் சுமத்தியுள்ள நிதி தொடர்பான அனைத்து புகார்களும் பொய்யானவை என்றும் ஓன்லர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மேலும் "நான் அவரை மன்னிக்க முடியும், ஆனால் அவர் எனக்குச் செய்ததை என்னால் மறக்க முடியாது" என்றும் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். ங்களின் நான்கு குழந்தைகளும் தற்போது விடுதியில் தங்கிப் படிப்பதாகவும், மேரி கோம் அவர்களுக்குக் கல்விக்கட்டணம் செலுத்தினாலும், அவர்களை வளர்த்ததில் தனக்கு முக்கியப் பங்கு உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News