செய்திகள்

கலைஞர் எழுச்சி பேரவை என்ற புதிய அமைப்பை அழகிரி தொடங்க இருப்பதாக ஆதரவாளர் தகவல்

Published On 2018-09-13 21:28 IST   |   Update On 2018-09-13 21:28:00 IST
கலைஞர் எழுச்சி பேரவை என்ற பெயரில் புதிய அமைப்பை மு.க அழகிரி தொடங்க இருப்பதாகவும், அது தொடர்பாக மாவட்ட வாரியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. #MKAzhagiri
மதுரை:

திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைவுக்கு பின்னர் மு.க ஸ்டாலின் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றார். ஆனால், கருணாநிதி இருக்கும் போதே திமுகவில் இருந்து நீக்கப்பட்ட அழகிரி, அவரது மறைவுக்கு பின்னர் தனது ஆதரவாளர்களுடன் பேரணி நடத்தினார். 

இந்நிலையில், கலைஞர் எழுச்சி பேரவை என்ற பெயரில் புதிய அமைப்பை மு.க அழகிரி தொடங்க இருப்பதாக அவரது ஆதரவாளர் இசக்கி முத்து தெரிவித்துள்ளார். இதற்காக, மாவட்ட வாரியாக ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார். 

காஞ்சிபுரம், சிவகங்கை மாவட்ட ஆதரவாளர்களை நாளையும் தஞ்சை, திருவாரூர் மாவட்ட ஆதரவாளர்களை நாளை மறுநாளும் சந்தித்து முக அழகிரி ஆலோசனை நடத்த உள்ளார். 
Tags:    

Similar News