இன்றைய ராசிபலன் 1.1.2026: இவர்களுக்கு கல்யாணக் கனவுகள் நனவாகும்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
வாழ்த்துச் செய்திகளால் வளம் காணும் நாள். முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலைபேசி வழியில் நல்ல தகவல் வந்து சேரும்.
ரிஷபம்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொகை வரவு திருப்தி தரும். செய்தொழிலில் மேன்மையும், உயர்வும் கிட்டும்.
மிதுனம்
அச்சுறுத்தும் நோய்கள் அகன்று ஓடும் நாள். இறை வழிபாட்டில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் உங்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
கடகம்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் ஏற்படும். வீடு, இடம் சம்பந்தமாக எடுத்த முடிவு வெற்றி பெறும்.
சிம்மம்
தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.
கன்னி
சிறப்புகள் வந்து சேர சிவாலய வழிபாட்டில் கவனம் செலுத்தும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும்.
துலாம்
எதையும் யோசித்துச் செய்ய வேண்டிய நாள். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
விருச்சிகம்
சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் கூடும் நாள். ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.
தனுசு
இறை வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். விருப்பங்கள் நிறைவேறும். சகோதரர்கள் உங்களின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவர்.
மகரம்
நலங்கள் வந்து சேர நந்தியெம்பெருமானை வழிபட வேண்டிய நாள். பிறருக்காக பொறுப்புகள் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும்.
கும்பம்
வளர்ச்சி கூடும் நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். தொழில் நலன் கருதிப் புதிய கூட்டாளிகளைச் சேர்ப்பீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி கைகூடும்.
மீனம்
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். தற்காலிகப் பணி நிரந்தரப் பணியாக மாறலாம்.