செய்திகள்

சேலம் மாவட்டத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2018-07-27 10:46 GMT   |   Update On 2018-07-27 10:46 GMT
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை திரும்ப பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்:

தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் சொத்துவரி 50 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக தமிழக அரசு உயர்த்தி உள்ளது. இதனை கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி சேலம் மத்திய மாவட்ட தி.மு.க.சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை திரும்ப பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வக்கீல் ராஜேந்திரன் தொடங்கி வைத்து பேசினார்.

அப்பேது அவர், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் சொத்துவரியை இரு மடங்காக உயர்த்தி உள்ளது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். எனவே தமிழக அரசு மக்கள் நலனை கருத்தில் கொண்டு உயர்த்தப்பட்ட சொத்துவரியை திரும்ப பெற வேண்டும் என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் சுபாசு, சூடாமணி, அவை தலைவர் கலையமுதன், செல்வகணபதி, துணை செயலாளர் ராஜேந்திரன், மாநகர செயலாளர் ஜெயக்குமார், வக்கீல் அண்ணாமலை, ரகுபதி, தாமரை கண்ணன், லலிதா சுந்தரராஜன், பகுதி செயலாளர்கள் சாந்த மூர்த்தி, குமரவேல், முருகன், ராமச்சந்திரன், நாசர்கான், கிச்சிப்பாளையம் ஜெய், கே.டி.மணி, பச்சியப்பன், ஜபீர் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் எடப்பாடியில் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சுந்தரம், ஒன்றிய செயலாளர் நிர்மலா, அம்மாசி, ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆத்தூர் நகராட்சி அலுவலகம் முன்பு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முல்லை பன்னீர் செல்வம், நகர செயலாளர் பால சுப்பிரமணி, வேல்முருகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னதுரை, தமிழ்செல்வன், முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி, ஒன்றிய செயலாளர்கள் செழியன், முருகேசன், சக்கரவர்த்தி, பாரப்பட்டி சுரேஷ்குமார், வெண்ணிலா சேகர், மாணிக்கம் மற்றும் பழனிசாமி, அகிலன், இளைஞர் அணி அமைப்பாளர் சந்திர மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News