செய்திகள்
கோப்புப்படம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து கவர்னரை சந்தித்து முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை

Published On 2018-05-23 16:19 GMT   |   Update On 2018-05-23 16:19 GMT
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போரட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கவர்னர் உடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தி வருகின்றனர். #SterliteProtest
சென்னை:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போரட்டத்தில் போலீசார் நேற்று மற்றும் இன்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், மாவட்ட கலெக்டர், எஸ்.பி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், சென்னை ராஜ்பவனில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

வன்முறை மேலும் பரவாமல் இருக்க மூன்று மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மொபைல் இண்டெர்நெட் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News