கார்

விலை உயர்வு... வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த எம்ஜி மோட்டார்

Published On 2025-12-24 14:57 IST   |   Update On 2025-12-24 14:57:00 IST
  • இந்த நிறுவனம் சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட ஹெக்டர் பேஸ்லிப்ட் காரை அறிமுகம் செய்தது.
  • இதன் டீசல் மற்றும் 6 சீட் வேரியண்ட் விலை அடுத்த மாதம் வெளியிடப்படும் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.

எம்.ஜி. மோட்டார் இந்தியா நிறுவனம், அடுத்த மாதம் முதல் கார்களின் விலையை உயர்த்த உள்ளது. இது குறித்து இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொதுவாக அனைத்து மாடல்களின் விலையும் சுமார் 2 சதவீதம் அதிகரிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலதன பொருட்கள் விலை உயர்வு மற்றும் பொருளாதார ஏற்ற இறக்கங்கள் தான் இதற்கு காரணம் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி இந்த நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றான விண்ட்சர் இ.வி. எலெக்ட்ரிக் காரின் ஷோரூம் விலை ரூ.14.27 லட்சம் முதல் ரூ.18.76 லட்சம் வரை உள்ளது. இது சுமார் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.37 ஆயிரம் வரை உயர்த்தப்படலாம்.

இதுபோல் இந்த நிறுவனத்தின் என்ட்ரி லெவல் மாடலான Comet EV ஷோரூம் விலை சுமார் ரூ.7.64 லட்சம் முதல் ரூ.10.19 லட்சம் வரை உள்ளது. இதன் விலை சுமார் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிறுவனம் சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட ஹெக்டர் பேஸ்லிப்ட் காரை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ.11.99 லட்சம் முதல் ரூ.18.99 லட்சம் வரை உள்ளது. இதுபோல் 7 சீட்டர் ஹெக்டர் பிளஸ் விலை சுமார் ரூ.17.29 லட்சம் முதல் ரூ.19.49 லட்சம் வரை உள்ளது. இதன் டீசல் மற்றும் 6 சீட் வேரியண்ட் விலை அடுத்த மாதம் வெளியிடப்படும் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ், பி.ஒய்.டி. ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் விலையை உயர்த்தின. இதை தொடர்ந்து எம்.ஜி. மோட்டார் நிறுவனமும் இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News