செய்திகள்

பிளஸ்-2 தேர்வில் மகன் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தாய் தற்கொலை

Published On 2018-05-23 14:53 IST   |   Update On 2018-05-23 14:53:00 IST
பிளஸ்-2 தேர்வில் மகன் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாம்பரம்:

பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் காமராஜர் நகரில் வசித்து வருபவர் சிவசங்கரன். இவரது மனைவி கனிமொழி. பொன்னேரி கோர்ட்டில் தலைமை எழுத்தாளராக பணியாற்றி வந்தார்.

இவர்களது மகன் இனியவன். பம்மலில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார். சமீபத்தில் வெளியான தேர்வு முடிவில் அவர் 631 மதிப்பெண் எடுத்தார்.

ஆனால் கனிமொழி மகன் கூடுதலாக மதிப்பெண் எடுப்பார் என நினைத்தார். இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் உள்ள அறையில் கனிமொழி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து சங்கர்நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News