உலகம்

போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி: முக்கிய பிரச்சினைகளில் அமெரிக்கா- உக்ரைன் இடையே ஒருமித்த கருத்து

Published On 2025-12-24 18:39 IST   |   Update On 2025-12-24 18:39:00 IST
  • உக்ரைன் பிராந்தியங்களை விட்டுக்கொடுக்க ஜெலன்ஸ்கி தொடர்ந்து மறுத்து வருகிறார்.
  • மற்ற முக்கிய பிரச்சினைகளையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது.

ரஷியா- உக்ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடங்கியது. இந்த போர் தொடங்கி 4 வருடங்கள் முடிய உள்ளன. இருந்தபோதிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரு நாடுகளுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க அதிகாரிகள் ரஷியா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

உக்ரைனின் சில பகுதிகளை தங்களுக்கு தர வேண்டும் என ரஷிய அதிபர் உறுதியாக உள்ளார். அதேவேளையில் தங்களது நிலப்பரப்பை விட்டுக்கொடுக்க மாட்டோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி வருகிறார்.

இதனைத் தவிர்த்து பல்வேறு விசயங்கள் குறித்து உக்ரைனுடன் அமெரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் இரு நாடுகளுக்கும் இடையில் பல பிரச்சினைகளில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

20 அம்சங்கள் கொண்டு திட்டத்தை அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் உருவாக்கியுள்ளார். இதுகுறித்து மாரத்தான் பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. புளோரிடாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு உக்ரைன் அதிபர், ஒருமித்த கருத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். ரஷியா இது குறித்து இன்னும் பதில் ஏதும் அளிக்கவில்லை.

டான்பாசில் உள்ள மீதமுள்ள கைப்பற்றப்படாத பகுதிகளை உக்ரைன் விட்டுத்தர வேண்டும் என்பது ரஷியாவின் அதிகப்பட்ச கோரிக்கையாகும். இதை உக்ரைன் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது. லுகான்ஸ்க் பிராந்தியத்தின் பெரும் பகுதியையும், டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் 70 சதவீத பகுதியையும் ரஷியா ஆக்கிரமித்துள்ளது.

Tags:    

Similar News