உலகம்

ஓமனில் ஈரான்- அமெரிக்கா இடையே மறைமுக பேச்சுவார்த்தை

Published On 2026-02-07 11:08 IST   |   Update On 2026-02-07 11:08:00 IST
  • ஈரான் அணுஆயுத திட்டம் விவகாரத்தில் ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என டிரம்ப் விரும்புகிறார்.
  • ஓமனில் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஓமனில் இருநாடுகளும் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை எவ்வாறு அணுகுவது என்பது தொடர்பான விசயத்தில், மீண்டும் ஆரம்ப புள்ளிக்கு இரு நாடுகளும் திரும்பியதாக தெரிகிறது. அமெரிக்கா சார்பில் மத்திய கிழக்கு ராணுவ கமாண்டர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

இருநாட்டின் பிரதிநிதிகள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஓமன் மத்தியஸ்தரராக செயல்பட்டு, ஓமனிடம் இரு நாடுகளும் தங்கள் கருத்தை தெரிவித்து அதை பரிமாற்றிக் கொண்டன. இந்த பேச்சுவார்த்தை மூலம் பதற்றம் முடிவுக்கு வரும் என ஈரான் நம்புகிறது.

அதேவேளையில், ஈரானின் அணுஆயுத திட்டம் குறித்து ஒப்பந்தம் முடிவுக்கு வராமல் பேச்சுவார்த்தை முடிவு பெறாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அணுஆயுத திட்டம் ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்னால் ஈரான் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்திருந்தார்.

ஓமனில் மறைமுக பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையில், ஈரானுடன் அமெரிக்கா சிறந்த பேச்சுவார்த்தைகளை நடத்தியது எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் அடுத்த வாரம் தொடக்கத்தில் மேற்கொண்டு பேச்சுவார்த்தைக்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News