உலகம்

ரஷியாவில் பரபரப்பு: ராணுவ அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு

Published On 2026-02-07 01:07 IST   |   Update On 2026-02-07 01:07:00 IST
  • துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மாஸ்கோ:

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் லெப்டினன்ட் ஜெனரல் விளாடிமிர் அலெக்ஸீவ் வீடு அமைந்துள்ளது.

இந்நிலையில், தனது குடியிருப்பு முன் நின்றுகொண்டிருந்த அலக்ஸியேவ் மீது மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்தக் கொலை முயற்சிக்கு பின்னணியில் உக்ரைன் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. அலெக்ஸியேவ் அந்நாட்டின் அதிபர் புதினுக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

Tags:    

Similar News