பாகிஸ்தான் தலைநகரில் ஷியா முஸ்லிம்கள் கூடும் மண்டபத்தில் பயங்கர குண்டுவெடிப்பு - 31 பேர் உயிரிழப்பு
- மேலும் 160 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
- மண்டபத்தில் வாயில் அருகே தடுத்து நிறுத்தப்பட்டபோது தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச்செய்துள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷியா சமூகத்தினர் கூடும் மண்டபத்தில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.
இஸ்லாமாபாத்தின் ஷேசாத் பகுதியில் உள்ள இமாம்பர்காஹ் என்ற ஷியா சமூகத்தினர் கூடும் மண்டபத்தில் இன்று மக்கள் அதிகம் கூடியிருந்த சமயம் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. சந்தேக நபர் ஒருவர் மண்டபத்தில் வாயில் அருகே தடுத்து நிறுத்தப்பட்டபோது தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச்செய்துள்ளார்.
இதில் குறைந்தது 31 பேர் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 160 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
குண்டுவெடிப்பின் தாக்கத்தால் மண்டப கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இஸ்லாமாபாத் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை எந்த அமைப்பும் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பிரிவினைவாதிகள் பயங்கரவாத தாக்குதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில் தற்போது பாகிஸ்தான் தலைநகரிலேயே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.