செய்திகள்
அறந்தாங்கி அரசு மருத்துவ மனையை தரம் உயர்த்த வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சியினர் கோரிக்கை
அறந்தாங்கி அரசு மருத்துவமனையை தலைமை மருத்துவமனை அளவிற்கு தரம் உயர்த்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அறந்தாங்கி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறந்தாங்கி தாலுகா 13-வது மாநாடு அறந்தாங்கி கட்டுமாவடி சாலையில் உள்ள இளங்கோ திருமண மஹாலில் ஞாயிறு மாலை நடைபெற்றது. மாநாட்டிற்கு வி.லெட்சுமணன் ,எம்.நாராயணமூர்த்தி , எ.வின்னரசி, ஆகியோர் தலைமை வகித்தார். மாநாட்டு கொடியை மா வட்டக்குழு உறுப்பினர் எ.பால சுப்ரமணியன் ஏற்றினார்.
நகரச்செயலாளர் கே.தங்கராஜ் வரவேற்று பேசினார். தாலுகா செயலாளர் தென்றல் கருப்பையா வேலை அறிக்கை சமர்ப்பித்தார். மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் க.செல்வராஜ், தொடக்க உரையாற்றினார். மாவட்டச்செயற்குழு உறுப்பினர் மா.முத்து ராமலிங்கன் வாழ்த்தி பேசினார். தென்றல் கருப்பையா, எ.பாலசுப்ரமணியன், வி.லெட்சுமணன், கே.தங்கராஜ், கே.கணேசன், மேகவர்ணம், எஸ்.சரோஜா, கே.சாத்தையா, வி.ஜெயராமன், எ.ஜான்யோகரெத்தினம்,ஆர்.கருணா, ராதா,ஆகிய பண்ணிரெண்டு கொண்ட புதிய தாலுகா குழு தேர்வு செய்யப்பட்டது.
புதிய அறந்தாங்கி தாலுகா செயலாளராக எ.பாலசுப்ர மணியன் தேர்வு செய்யப்பட்டார். நிறைவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உரையாற்றினார். அறந்தாங்கி அரசு மருத்துவமனையை தலைமை மருத்துவமனை அளவிற்கு தரம் உயர்த்த வேண்டும், பயிர் இன்சுரன்ஸிக்கு நில உளவடைதாரரே பதிவு செய்ய வேண்டும், பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், புதிய பயிர் கடன் வழங்க வேண்டும், அறந்தாங்கி நகரில் பாதாள சாக்கடைத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். சமத்துவபுரத்தில் குடியிருப் பவர்களுக்கு வீட்டு வரி ரசீது போட வேண்டும், ஆகிய தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.