செய்திகள்

பொன்னமராவதியில் நாம் தமிழர்கட்சி பொதுக்கூட்டம்

Published On 2017-11-12 19:14 IST   |   Update On 2017-11-12 19:14:00 IST
பொன்னமராவதியில் நாம் தமிழர் கட்சியின் திருமயம் தொகுதி மகளிர் பாசறை கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
பொன்னமராவதி:

பொன்னமராவதியில் நாம் தமிழர் கட்சியின் திருமயம் தொகுதி மகளிர் பாசறை கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய பொறுப்பாளர் பாண்டிமீனா தலைமை வகித்தார். மாநில மகளிர் பாசறை நிர்வாகிகள் திருநங்கை தேவி, இலக்கியா ஆகியோர் மகளிர் உரிமைகள், பாசறையின் கொள்கைகள் பற்றி பேசினர். பேரூந்து நிலையம் முன்பு கட்சிக் கொடியேற்றப்பட்டு உறுதி மொழி எடுக்கப்பட்டது.

இதில் திருமயம் சோபனா,  பொன்னமராவதி கார்த் திகா, சிவகங்கை சண்முக வள்ளி, கட்சியின் மண்டலச்  செயலாளர்  கனகரெத்தினம், ஒன்றியச் செயலா ளர் முருகேஷ், தொகுதிச் செயலாளர் நாகராஜ், கோசலை, ரேவதி, லெட்சுமி, உமா, பிரியா, சிவகாமி, பானுமதி, மலர் கொடி, தேவி, கோகிலா, ராஜேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News