செய்திகள்

கர்நாடகத்தில் மழை பெய்ததால் காவிரியில் தண்ணீர் திறப்பு- வைகோ

Published On 2018-07-20 04:55 GMT   |   Update On 2018-07-20 04:55 GMT
கர்நாடகாவில் பெருமழையும், பலத்த வெள்ளமும் பெருக்கெடுத்து ஓடுவதால் தான் காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதாக வைகோ கூறினார். #MDMK #Vaiko #Cauverywater
ஆலந்தூர்:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டு இருக்கிறார். கர்நாடகாவில் பெருமழையும், பலத்த வெள்ளமும் பெருக்கெடுத்து ஓடுவதால் தான் இங்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை கர்நாடகா முறைப்படி திறந்து விடுவார்கள் என்று இதனை வைத்து நாம் கணக்கிடக்கூடாது. ஏன் என்றால் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி காவிரி நீரை தமிழகத்துக்கு தருவதற்கு தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பை காட்டி வருகிறார்.


மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தால் அதைவிட அநியாயம், அநீதி, அயோக்கியத்தனம் எதுவும் கிடையாது.

வருமான வரித்துறை சோதனையில் சுமார் ரூ. 100 கோடி ரொக்கம், 100 கிலோ தங்கம் பிடிபட்டது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அதற்குரிய விளக்கத்தை தெரிவிக்க வேண்டும். அப்போது தான் மக்களுக்கு நம்பிக்கை வரும்.

இவ்வாறு அவர் கூறினார். #MDMK #Vaiko #Cauverywater
Tags:    

Similar News