காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு பாஜக- காங். துரோகம் செய்து வருகிறது: ஜி.கே.வாசன்
திண்டுக்கல்:
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
டெல்டா பகுதியில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்க காவிரி மேலாண்மை ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல்- டீசல் விலையை மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டும்.
கச்சா எண்ணை விலை ஏற்றத்துக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விலை ஏற்றத்தால் அத்தியாவசிய பொருட்கள் விலை ஏறி வருகிறது.
ஆகையால் ஜி.எஸ்.டி.க்குள் பெட்ரோல் டீசலை கொண்டு வரவேண்டும். காவிரி விவகாரத்தில் காங்கிரஸ், பாரதீய ஜனதா அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகின்றது. பா.ஜனதா- காங்கிரஸ் எதிரும் புதிருமாக இருந்தாலும் தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் தருவது தொடர்பாக 2 கட்சிகளும் ஒன்று சேர்ந்து தண்ணீர் தராமல் துரோகம் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. அதனை சரி செய்வது ஆளுங்கட்சியின் கடமையாகும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் வங்கிக் கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். #gkvasan #cauveryissue