இந்தியா

இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் சேவை இம்மாதம் தொடக்கம்!

Published On 2026-01-01 19:41 IST   |   Update On 2026-01-01 19:41:00 IST
  • 'வந்தே பாரத்' ரெயில் பகல் நேர ரெயில் சேவையாக இயங்கி வருகிறது.
  • 966 கி.மீ. தூரத்தை ஒரே ஒரு நிறுத்தத்துடன் 14.30 மணி நேரத்தில் இந்த ரெயில் கடக்கும்.

இந்தியாவின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்திய ரெயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்டது 'வந்தே பாரத்' ரெயில் சேவை. பகல் நேர ரெயில் சேவையான இதன் மூலம் ஒரு நாளுக்கும் குறைவான நேரத்தில் பயணிகள் நாட்டின் ஒரு நகரிலிருந்து மற்றொரு முக்கிய நகரத்தை அடைய முடியும்.

இந்நிலையில், இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் சேவை மேற்கு வங்கத்தின் ஹவுரா - அசாமின் காமாக்யா இடையே இயக்கப்படும் என ஒன்றிய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

966 கி.மீ. தூரத்தை ஒரே ஒரு நிறுத்தத்துடன் (மால்டா டவுன்) 14.30 மணி நேரத்தில் இந்த ரெயில் கடக்கும். உணவுடன் சேர்த்து 3AC- .2,300, 2AC . 3,000, 1AC .3,600 நிர்ணயம். இதனை இம்மாதம் பிரதமர் தொடங்கி வைக்கிறார் என்று மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News