சினிமா செய்திகள்
விஜயின் கடைசி படமான ஜன நாயகன் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
- 'ஜன நாயகன்' தான் விஜயின் கடைசி படம் ஆகும்.
- ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது.
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.
விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'ஜன நாயகன்' தான் விஜயின் கடைசி படம் என்று கூறப்படுவதால் இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அண்மையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது.
இந்நிலையில், ஜன நாயகன் படத்தின் டிரெய்லர் ஜனவரி 3 ஆம் தேதி மாலை 6.45 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.