வழிபாடு

இன்று சோமவார சங்கடஹர சதுர்த்தி

Published On 2024-01-29 02:30 GMT   |   Update On 2024-01-29 02:30 GMT
  • விநாயகருக்கான சிறப்பு வழிபாட்டு நாள்.
  • சோமவார சதுர்த்தி மிகவும் சிறப்பு.

விநாயகருக்கான சிறப்பு வழிபாட்டு நாள். அதுவும் சோமவார சதுர்த்தி மிகவும் சிறப்பு. கணபதியின் 32 முக்கிய வடிவங்களில் சங்கடஹர கணபதியும் ஒருவர். மாதம்தோறும் பௌர்ணமிக்குப் பிறகு வரும் நான்காவது நாளான சதுர்த்தி திதி, சங்கடஹர சதுர்த்தி எனப்படும். ஆவணி, மாசி மாதத்தில் வருவதே மஹாசங்கடஹர சதுர்த்தி எனப்படும்.

`சங்கட' என்றால் துன்பம் `ஹர' என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது. சங்கடஹர சதுர்த்தி நாளில் வீட்டிலேயோ வீட்டின் அருகில் உள்ள பிள்ளையாருக்கோ அபிஷேகம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும் என்பர். குறிப்பாக, இந்த 21 மூலிகைகளால் விநாயகரை அர்ச்சிக்க குறிப்பிட்ட பலன் கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.

`அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்

பிறந்ததொல்லை போம், போகாத் துயரம் போம்,

நல்ல குணமதிகமாம் அருணை

கோபுரத்துள் மேவும்

கணபதியைக் கைதொழுதக் கால்!'

Tags:    

Similar News