வழிபாடு

நீண்ட ஆயுள் தரும் ஆயுஷ் ஹோமம்

Published On 2026-02-27 12:45 IST   |   Update On 2026-02-27 12:46:00 IST
  • ஆயுஷ் ஹோமம் தீராத நோய்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது.
  • ஹோமம் செய்வதன் மூலம் தேவையற்ற பயங்கள் நீங்கி, மன தைரியம் மற்றும் நீண்ட வாழ்நாள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஆயுஷ் ஹோமம் நீண்ட ஆயுள், நலம் மற்றும் ஆரோக்கியம் பெற ஆயுர் தேவதையை வேண்டி செய்யப்படும் ஒரு சிறப்பு வேத சடங்காகும். இது பொதுவாக பிறந்தநாள், திருமண விழாக்கள் மற்றும் குழந்தைகளுக்கு முதல் பிறந்தநாளில் நடத்தப்படுகிறது. இந்த ஹோமம் செய்வதன் மூலம் தீராத நோய்கள் குணமடைவதாகவும், தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிடைப்பதாகவும் நம்பப்படுகிறது.

ஆயுஷ் ஹோமத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்:

ஆயுள் மற்றும் ஆரோக்கியம்: ஆயுஸ் ஹோமம் நீண்ட ஆயுளை அருளவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் நடத்தப்படும் முக்கிய ஹோமமாகும்.

பரிகாரம்: ஆயுஷ் ஹோமம் தீராத நோய்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளை குணப்படுத்த உதவுகிறது.

கால நேரம்: குழந்தைக்கு முதல் பிறந்தநாள் (பிறந்த நட்சத்திரத்தில்) அன்று செய்வது சிறப்பானது. மேலும், ஒவ்வொருவரின் பிறந்தநாளின் போதும், ஒவ்வொரு ஆண்டும் இந்த ஹோமத்தை செய்யலாம்.

மங்கள கரமான வழிபாடு: இது ஆயுர் தேவதையை வேண்டி, நீண்ட ஆயுளும், செல்வமும், ஆரோக்கியமும் கிடைக்க பிரார்த்திக்கப்படும் ஒரு சிறப்பு வழிபாடாகும்.

சுபம்: இந்த ஹோமம் செய்வதன் மூலம் தேவையற்ற பயங்கள் நீங்கி, மன தைரியம் மற்றும் நீண்ட வாழ்நாள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஆயுஷ் ஹோமம் என்பது ஒருவரின் ஆயுளை நீட்டிக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் வழிவகுக்கும் மிகச்சிறந்த பரிகாரமாக கருதப்படுகிறது.

Tags:    

Similar News