நீங்கள் சதுர்த்தி திதியில் பிறந்தவரா?

நீங்கள் சதுர்த்தி திதியில் பிறந்தவர்களாக இருந்தால் விநாயகரை வழிபடுவதன் மூலம் வெற்றிகளை வரவழைத்துக்கொள்ள முடியும்.
விநாயகர்
விநாயகர்
Published on

பிறந்த நட்சத்திரத்திற்கு பலன் பார்ப்பது போல, பிறந்த திதிக்கும் பலன் பார்க்கலாம். அந்த அடிப்படையில் நீங்கள் சதுர்த்தி திதியில் பிறந்தவர்களாக இருந்தால் விநாயகரை வழிபடுவதன் மூலம் வெற்றிகளை வரவழைத்துக்கொள்ள முடியும். இந்த திதியில் பிறந்தவர்கள் சுதந்திரமாகச் செயல்பட விரும்புவார்கள். அடிமைத் தொழில் புரிவது பிடிக்காது. அதாவது பிறரிடம் கைகட்டிச் சேவகம் செய்வதைக் காட்டிலும் சுய தொழிலை ஏற்படுத்தி பெரிய தொழிலதிபராக வரவேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் இடம்பிடிக்கும். ரகசியம் மிகுந்தவர்களாக இருப்பீர்கள்.

பஞ்சமி திதியில் நீங்கள் பிறந்திருந்தால் வாழ்க்கையில் போராடி வெற்றி பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் உங்களுக்கு நிறைய உண்டு. உங்களைக் கூட்டாளிகளாகச் சேர்த்துக் கொண்டவர்களுக்கு யோகம். அவர்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றி பெற நீங்கள் உறுதுணையாக இருப்பீர்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com