சந்திரகிரகணம்: பழனி கோவிலில் 3-ந்தேதி பூஜை நேரம் மாற்றம்
- பழனி மலைக்கோவிலில் அன்று மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெறும்.
- 4-ந்தேதி விசுவரூப தரிசனத்திற்கு பிறகு வழக்கம் போல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்.
சந்திரகிரகணத்தை முன்னிட்டு வருகிற 3-ந்தேதி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பூஜை நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
வருகிற 3-ந்தேதி சந்திரகிரகணம் மாலை 3.30 மணிக்கு தொடங்கி மாலை 6.47 மணிக்கு முடிவடைகிறது. இதனை முன்னிட்டு பழனி மலைக்கோவிலில் அன்று மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெறும். உச்சிகால பூஜை முடிந்தவுடன் மதியம் 1 மணிக்கு அனைத்து சன்னிதிகளும் திருக்காப்பிடப்படும். அன்றைய தினம் படிப்பாதை, விஞ்ச் மற்றும் ரோப்காரில் வரும் பக்தர்கள் காலை 10.30 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
சந்திரகிரகணம் முடிந்த பிறகு மாலை 7 மணிக்கு ஸம்ப்ரோச்சனை பூஜை தொடர்ந்து சாயரட்சை, தங்கரத புறப்பாடு, பின் அர்த்தசாம பூஜையுடன் சன்னிதி திருக்காப்பிடப்படும். மறுநாள் 4-ந்தேதி விசுவரூப தரிசனத்திற்கு பிறகு வழக்கம் போல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.