வழிபாடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருட சேவை

Published On 2023-11-28 04:27 GMT   |   Update On 2023-11-28 04:27 GMT
  • ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு கருடசேவை நடப்பது வழக்கம்.
  • நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இரவு கருடசேவை நடப்பது வழக்கம். அதன்படி நேற்று இரவு கார்த்திகை மாதத்தையொட்டி கருடசேவை நடந்தது. கோவிலில் இருந்து ஊழியர்கள் உற்சவர் மலையப்பசாமியை வாகன மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.

அங்கு உற்சவரை தங்கக் கருட வாகனத்தில் வைத்து சிறப்பு அலங்காரம் செய்தனர். அலங்காரம் முடிந்ததும் சிறப்புப்பூஜைகள் செய்து வாகனச் சேவை தொடங்கியது. இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை தங்க, வைர நகைகள் அலங்காரத்தில் உற்சவர் மலையப்பசாமி தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அப்போது மாடவீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏலுகுண்டல வாடா.. வெங்கடரமணா கோவிந்தா கோவிந்தா.. என பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News