ராசிபலன்

இன்றைய ராசிபலன் 1.3.2026: இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி கூடும்

Published On 2026-03-01 05:53 IST   |   Update On 2026-03-01 05:53:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும் நாள். வீடு வாங்கும் முயற்சி கைகூடும். வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.

ரிஷபம்

நட்பு வட்டம் விரிவடையும் நாள். ஊர் மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் அனுகூலம் உண்டு. விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர்.

மிதுனம்

பெரிய மனிதர்களின் நட்பால் நன்மை கிடைக்கும் நாள். நிலையான வருமானத்திற்கு வழிபிறக்கும். இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறி தோன்றும்.

கடகம்

வாரிசுகளின் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் நாள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணையாக அமையும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

சிம்மம்

யோகமான நாள். நினைத்த நேரத்தில் நினைத்த காரியத்தை முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். ஆன்மிக பயணம் ஒன்று ஏற்படும்.

கன்னி

உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் நாள். சேமிப்பு உயரும். பிரபலங்களால் பாராட்டப்படுவீர்கள். தொழில் வெற்றிநடை போடும்.

துலாம்

பற்றாக்குறை அகலும் நாள். பணத்தேவைகள் பூர்த்தி ஆகும். நண்பர்கள் மனம் கோணாமல் நடந்துகொள்வது நல்லது. உடல்நலத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்படும்.

விருச்சிகம்

உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். பக்கத்தில் இருப்பவர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வர்.

தனுசு

சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள். கொடுக்கல், வாங்கல்களில் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு குறையலாம்.

மகரம்

வளர்ச்சி கூடும் நாள். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும்.

கும்பம்

நீடித்த நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும் நாள். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். பொருளாதார முன்னேற்றம் உண்டு. இடம் வாங்கும் முயற்சி கைகூடும்.

மீனம்

மகிழ்ச்சி கூடும் நாள். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். வாகன மாற்ற சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.

Tags:    

Similar News