வழிபாடு

திருப்பதியில் பக்தர்களுக்கு 'கோவிந்த கோடி' புத்தகங்கள்

Published On 2023-09-21 10:36 IST   |   Update On 2023-09-21 10:36:00 IST
  • விநாயகப் பெருமான் அனைத்து மக்களுக்கும் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரட்டும்.
  • கோவிந்த கோடி புத்தகங்களை பக்தர்களுக்கு இலவசமாக வினியோகித்தார்.

திருப்பதி:

திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் முதல் கூட்டம் நடந்தபோது, அதில் பங்கேற்ற அறங்காவலர் குழு தலைவர் பூமண.கருணாகர்ரெட்டி எம்.எல்.ஏ. சனாதன கருத்துக்கு ஆதரவாக 'கோவிந்த கோடி' எழுதும் திட்டத்தை அறிவித்தார். அதன்படி கோவிந்த நாமத்தை ஒரு கோடி முறை எழுதி வரும் பக்தர்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு சாமி தரிசனம் அளிக்கப்படும், எனத் தெரிவித்தார்.

இந்தநிலையில் திருப்பதியில் விநாயக சாகரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 'கோவிந்த கோடி' விநாயகரை அறங்காவலர் குழு தலைவர் பூமண.கருணாகர்ரெட்டி எம்.எல்.ஏ. தரிசனம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், கோவிந்த கோடியை விநாயகப் பெருமான் எழுதுவதுபோல் தயார் செய்யப்பட்டுள்ள இந்த சிலை நன்றாக இருக்கிறது. சிலை நிறுவப்பட்டுள்ள மண்டபத்தின் நான்கு பக்கமும் கோவிந்த கோடி நாமம் எழுதி வைத்திருப்பது சிறப்பு.

விநாயகப் பெருமான் அனைத்து மக்களுக்கும் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரட்டும். வெங்கடாசலபதி, விநாயகர் ஆசியோடு திருப்பதி நகரம் அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி அடைய வேண்டும், என்றார்.அதைத்தொடர்ந்து அறங்காவலா் குழு தலைவர், தெலுங்கில் எழுதப்பட்ட ஏராளமான கோவிந்த கோடி புத்தகங்களை பக்தர்களுக்கு இலவசமாக வினியோகித்தார். அறங்காவலர் குழு தலைவர், சாமி தரிசனம் செய்தபோது மேயர் ஷிரிஷா, கமிஷனர் ஹரிதா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News