ராசிபலன்

இன்றைய ராசிபலன் 4.3.2026: இந்த ராசிக்காரர்களுக்கு தொட்டது துலங்கும்

Published On 2026-03-04 05:56 IST   |   Update On 2026-03-04 05:56:00 IST
  • இன்றைய ராசிபலன்
  • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

மேஷம்

காரியம் கைகூடும் நாள். இல்லத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உடனிருப்பவர்கள் உங்கள் பணிக்கு உறுதுணையாக இருப்பர்.

ரிஷபம்

வியக்கும் செய்தி வீடு வந்து சேரும் நாள். பணவரவு திருப்தி தரும். சகோதர வழி ஒத்துழைப்பு கிடைக்கும். இல்லம் கட்டி குடியேறும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மிதுனம்

யோகமான நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். உள்ளன்போடு பழகியவர்களின் உதவி கிடைக்கும். தேகநலன் கருதி ஒரு தொகையைச் செலவிடுவீர்கள்.

கடகம்

விருப்பங்கள் நிறைவேறும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளின் தொடர்பு அனுகூலம் தரும்.

சிம்மம்

வருங்காலம் நலமாக அமைய வழிபிறக்கும் நாள். உறவினர்கள் சந்திப்பு சச்சரவுகளை உருவாக்கலாம். நவீன பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.

கன்னி

ஒற்றுமை பலப்படும் நாள். நேற்றைய பிரச்சனை ஒன்று இன்று நல்ல முடிவிற்கு வரும். பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும். உத்தியோகத்தில் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும்.

துலாம்

யோசிக்காது செய்த காரியங்களில்கூட வெற்றி கிடைக்கும் நாள். வரவு திருப்தி தரும். பிள்ளைகளின் கல்யாண கனவுகளை நனவாக்குவீர்கள்.

விருச்சிகம்

தொட்டது துலங்கும் நாள். மக்கள் செல்வாக்கு மேலோங்கும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

தனுசு

சந்தோஷம் அதிகரிக்கும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழும் வாய்ப்பு உண்டு. வரன்கள் வாயில் தேடி வரும்.

மகரம்

நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாள். சந்தித்தவர்களிடம் சிந்தித்துப் பேசுவது நல்லது. தொழில் தொடர்பான பயணங்களை மாற்றியமைத்துக் கொள்வீர்கள்.

கும்பம்

மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

மீனம்

புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும் நாள். பூமி வாங்கும் யோகம் உண்டு. திடீர் செலவுகள் இருந்தாலும் அதை ஈடு செய்ய வரவு வந்து சேரும்.

Tags:    

Similar News