வழிபாடு

கிறிஸ்துமஸ் பண்டிகை: மின்னொளியில் ஜொலிக்கும் தேவாலயங்கள்

Published On 2023-12-22 04:27 GMT   |   Update On 2023-12-22 04:27 GMT
  • டிசம்பர் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
  • வீடுகளில் குடில்கள் அமைத்தும், கிறிஸ்துமஸ் மரங்கள் வைத்தும் அலங்கரித்துள்ளனர்.

புதுச்சேரி:

ஏசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதன்படி வருகிற 25-ந்தேதி (திங்கட்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் குடில்கள் அமைத்தும், கிறிஸ்துமஸ் மரங்கள் வைத்தும் அலங்கரித்துள்ளனர். மேலும் வீடுகளில் ஸ்டார்கள் தொடங்கவிட்டுள்ளனர். மேலும் நகரப்பகுதியில் சாலையோரங்களில் குடில்கள், ஸ்டார்கள், கிறிஸ்துமஸ் மரங்கள், கிறிஸ்துமஸ் தாத்தா உடைகள், பொம்மைகள் உள்ளிட்டவைகள் விற்பனையும் மும்முரமாக நடந்து வருகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து கிறிஸ்தவர்கள் வீடுகளில் சென்று குழந்தைகளுக்கு பரிசுகளும் அளித்து வருகின்றனர்.

புதுவை ரெயில் நிலையம் அருகே உள்ள தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா, மிஷன் வீதி ஜென்மராக்கினி, தூய்மா வீதி கப்ஸ், அரியாங்குப்பம் மாதா, வில்லியனூர் மாதா உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.

Tags:    

Similar News