கிரிக்கெட் (Cricket)

விமான சாகசம், இசை கச்சேரி, லேசர் லைட் ஷோ.. களைகட்டப் போகும் உலகக் கோப்பை Finals..

Published On 2023-11-18 16:21 IST   |   Update On 2023-11-18 16:21:00 IST
  • இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.
  • இறுதிப் போட்டியை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

உலகக் கோப்பை 2023 இறுதிப் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. அக்டோபர் 11-ம் தேதி உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் துவங்கின. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் ஒரு போட்டியில் விளையாடின. அதன்படி புள்ளிகள் அடிப்படையில், முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதியில் மோதின.

அரையிறுதியில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் வெற்றி பெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நாளை நடைபெற இருக்கும் இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. இறுதிப் போட்டியை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஐ.சி.சி. மற்றும் பி.சி.சி.ஐ. இணைந்து ஏற்பாடுகளை செய்துள்ளன.

அந்த வகையில், நாளைய போட்டியில் டாஸ் போட்டதும் இந்திய விமானப் படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. மதியம் 1.35-க்கு துவங்கும் சாகச நிகழ்ச்சி 1.50 மணி வரை நடைபெற இருக்கிறது. பிறகு, போட்டியின் முதல் இன்னிங்ஸ் தேநீர் இடைவேளையின் போது ஆதித்யா காத்வியின் இசை கச்சேரி நடைபெறுகிறது.

பின் போட்டியின் முதல் இன்னிங்ஸ் இடைவேளையின் போது ப்ரிதம் சக்ரபோர்த்தி, ஜோனிதா காந்தி, நாகாஷ் அசிஸ், அமித் மிஸ்ரா, ஆகாசா சிங் மற்றும் துஷர் ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கும் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. பிறகு 2-வது இன்னிங்ஸ்-இன் தேநீர் இடைவேளையின் போது லேசர் மற்றும் லைட் ஷோ நடைபெறுகிறது.

Tags:    

Similar News