கிரிக்கெட்

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அமெரிக்கா த்ரில் வெற்றி - வங்கதேச கேப்டன் சொன்னது என்ன?

Published On 2024-05-24 06:57 GMT   |   Update On 2024-05-24 07:32 GMT
  • டி- 20 உலகக் கோப்பை 2024 தொடர் வரும் ஜூன் 2 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் முன்னதாக 3 ஆட்டங்கள் கொண்ட டி-20 போட்டிகள் அமெரிக்காவில் நடந்துவருகிறது.
  • வங்க தேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்க கிரிக்கெட் அணி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஒருங்கிணைக்கும் டி- 20 உலகக் கோப்பை 2024 சீரிஸ் வரும் ஜூன் 2 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் வங்கதேசம் - அமெரிக்கா இடையே 3 ஆட்டங்கள் கொண்ட டி-20 சீரிஸ் போட்டிகள் அமெரிக்காவில் தற்போது நடந்துவருகிறது.

இந்நிலையில் நேற்று (மே 23) சர்வதேச டி-20 தொடரின் 2 வது போட்டி, அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள ப்ரேரி வியூ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வங்க தேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் அமெரிக்க கிரிக்கெட் அணி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. விறுவிறுப்பாக நடந்த போட்டியில், வங்கதேசத்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய அமெரிக்கா, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

 

இந்த போட்டியில் டாஸ் வென்று வங்கதேச அணி பீல்டிங்கை தேர்வு செய்யவே, வங்கதேச அணி பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு அமெரிக்காவை 144/6 என்ற ரன் கணக்கில் மட்டுப்படுத்தினர்.

ஆனாலும் 145 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய வங்கதேசம் 138 ரன்கள் வரை மட்டுமே எடுத்தது.  இதனால், 6 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்காவிடம்  அந்த அணி தோற்றது. வெற்றியின் விளிம்பு வரை சென்றும் அதை எட்ட இயலாதது வங்கதேச அணிக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

 

 முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு வங்கதேச அணி கேப்டன் சாகிப் அல் ஹசன் பேட்டி ஒன்றில் கூறுகையில், உலகக்கோப்பை தொடருக்கு வங்கதேச அணி இன்னும் முழுமையாக தயாராகவில்லை, எங்களின் பயிற்சி போதாது, பெரிய அணிகளுடன் மோதுவதற்கான வலு இன்னும் வங்கதேச அணிக்கு ஏற்படவில்லை என்று தெரிவித்திருந்தார். இந்த பேட்டி,  அமெரிக்க அணி உடனான தோல்விக்குப் பின் மீண்டும் வைரலாகத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் 3 போட்டிகள் கொண்ட இந்த டி-20 தொடரின் 3 வது மற்றும் கடைசி போட்டி நாளை (மே 26) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

Similar News