கிரிக்கெட் (Cricket)

ஆஷஸ் 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய மண்ணில் ரூட் முதல் சதம்- முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 325/ 9

Published On 2025-12-04 17:10 IST   |   Update On 2025-12-04 17:10:00 IST
  • இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் சதம் விளாசினார்.
  • ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் 6 விக்கெட்டை வீழ்த்தினார்.

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி தொடக்க வீரரான டக்கெட் மற்றும் அடுத்து வந்த ஒலி போப் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

ஜாக் கிராலி - ரூட் இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். கிராலி 76 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த ப்ரூக் அதிரடியாக விளையாட முயற்சித்து 31 ரன்னில் வெளியேறினார்.

அதனை தொடர்ந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (19) தேவையில்லாமல் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதனை தொடர்ந்து ஸ்மித் 0, வில் ஜக்ஸ் 19 அட்கின்சன் 4 என வெளியேறினர். இதனால் ரூட் சதம் அடிப்பாரா இல்லையா என்பது கேள்வி குறியானது. அந்த நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சதத்தை ரூட் பதிவு செய்தார்.

இதனையடுத்து கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரூட் - ஆர்ச்சர் ஆஸ்திரேலிய பந்து வீச்சை நாலாபுறமும் சிதரடித்தனர். இந்த ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 61 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தது. கடைசி விக்கெட்டை வீழ்த்த முடியாமல் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் திணறிய நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஜோரூட் இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க் 6 விக்கெட்டை வீழ்த்தினார்.

Tags:    

Similar News