கிரிக்கெட் (Cricket)
டி20 கிரிக்கெட்டில் சுனில் நரைன் மற்றொரு சாதனை
- ஐ.பி.எல். தொடரில் சுனில் நரைன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
- 600 என்ற எண்ணைக் கொண்ட சிறப்பு ஜெர்சியை அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி அவருக்கு வழங்கியது.
அபுதாபி:
சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரைன் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
சர்வதேச டி20 லீக் தொடரில் நேற்று நடந்த ஷார்ஜா வாரியர்சுக்கு எதிரான போட்டியில் சுனில் நரைன் இந்த மைல்கல்லை அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்காக அவர் எட்டினார்.
இந்தப் பட்டியலில் ரஷித் கான் 681 விக்கெட்டுடன் முதல் இடத்திலும், பிராவோ 631 விக்கெட்டுடன் 2வது இடத்திலும் உள்ளனர்.
இதையடுத்து, சுனில் நரைனின் சாதனையை நினைவுகூரும் வகையில் 600 என்ற எண்ணைக் கொண்ட சிறப்பு ஜெர்சியை அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி அவருக்கு வழங்கி சிறப்பித்தது.
ஐபிஎல் தொடரில் சுனில் நரைன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.