கிரிக்கெட்

விமானத்தின் எகனாமி கிளாசில் எளிமையாக பயணித்த டோனி... வைரலாகும் வீடியோ

Published On 2024-05-25 12:36 GMT   |   Update On 2024-05-25 12:36 GMT
  • ஐபிஎல் 2024 தொடரிலிருந்து சிஎஸ்கே வெளியேறிய நிலையில் டோனி தற்போது தனது சொந்த ஊரான ராஞ்சியில் ஓய்வெடுத்து வருகிறார்.
  • பெங்களூரில் இருந்து ராஞ்சிக்கு விமானத்தின் எகானமி கிளாஸில் டோனி பயணித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் 2024 தொடரிலிருந்து சிஎஸ்கே வெளியேறிய நிலையில் டோனி தற்போது தனது சொந்த ஊரான ராஞ்சியில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் பெங்களூரில் இருந்து ராஞ்சிக்கு விமானத்தின் எகானமி கிளாஸில் டோனி பயணித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், தோனி தனது பெட்டியை மேல் உள்ள ரேக்கில் வைத்துவிட்டு தனது இருக்கையில் அமர்ந்திருப்பது பதிவாகியுள்ளது. சக பயணிகள் டோனியை தங்கள் போன் கேமராக்களில் படம்பிடித்து அவரின் எளிமையை கைதட்டி வரவேற்றனர்.

தொடர்ந்து இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் டோனியின் எளிமையை மெச்சி தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வைத்து நடைபெற்ற ஆர்சிபி உடனான ஆட்டத்தில் தோல்விக்கு பின்னர் ஆர்சிபி அணியினருக்கு டோனி கை கொடுக்காமல் மைத்தனத்தில் இருந்து சென்றது சர்ச்சையான நிலையில் அந்த களங்கத்தைப் போக்கும் வகையில் இந்த வீடியோவைப் பகிர்ந்து டோனியின் நற்பண்புகளை ரசிகர்கள் உச்சி முகர்ந்து வருகின்றனர். இதற்கிடையில் 6 ஆம் கட்ட தேர்தலான இன்று ( மே 250 பீகார் மாநிலம் ராஞ்சியில் டோனி வாக்களித்து குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

Similar News