கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெற்ற ஒரு வீரர் கூட ஐபிஎல் பைனல் செல்லவில்லை

Published On 2024-05-25 10:15 GMT   |   Update On 2024-05-25 10:15 GMT
  • ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
  • ஐபிஎல் தொடர் முடிவடைந்த ஒரே வாரத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இருக்கும் 20 நாடுகள் தங்கள் அணியில் இடம்பெறும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஹர்திக் பாண்ட்யா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

ஐபிஎல் தொடர் முடிவடைந்த ஒரே வாரத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது. இந்நிலையில் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம்பெற்ற 15 வீரர்களில் ஒருவர் கூட ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடவில்லை.

ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியும் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன. ஹைதராபாத் அணியில் இடம் பெற்றுள்ள வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹைதராபாத் அணியில் உள்ள நடராஜன் ஆகியோர் சிறப்பாக விளையாடியுள்ள போதும் இந்திய அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News