இந்தியா -நியூசிலாந்து ஒருநாள் தொடர்: டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு
- இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 11-ம் தேதி நடக்கவுள்ளது.
- ஜனவரி 14 மற்றும் 18 ஆம் தேதிகளில் முறையே 2-வது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 5 டி20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது.
இதில் முதலில் ஒருநாள் தொடரும் அதனை தொடர்ந்து டி20 தொடரும் நடைபெற உள்ளது. இதற்கான முதல் ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 11-ம் தேதி தொடங்க உள்ளது. ஜனவரி 14 மற்றும் 18 ஆம் தேதிகளில் முறையே 2-வது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
இந்த நிலையில் 3 ஒருநாள் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதல் ஒருநாள் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை டிசம்பர் 31-ந் தேதி காலை 11 மணி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2-வது மற்றும் 3-வது ஒருநாள் போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை ஜனவரி 1-ந் தேதி காலை 11 மணி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.