கிரிக்கெட் (Cricket)

பெண்கள் டி20 கிரிக்கெட் தரவரிசை: ஷபாலி, ரேணுகா முன்னேற்றம்

Published On 2025-12-31 11:12 IST   |   Update On 2025-12-31 11:12:00 IST
  • ஷபாலி வர்மா 4 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார்.
  • ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9-ல் இருந்து 10-வது இடத்துக்கு சரிந்தார்.

துபாய்:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பெண்கள் 20 ஓவர் போட்டி வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது.

இதன்படி பேட்டர்களின் தரவரிசையில் டாப்-5 இடங்களில் மாற்றமில்லை. ஆஸ்திரேலியாவின் பெத் மூனி, வெஸ்ட் இண்டீசின் மேத்யூ ஹெய்ன்ஸ், இந்தியாவின் மந்தனா, ஆஸ்திரேலியாவின் தாலியா மெக்ராத், தென்ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட் முதல் 5 இடங்களில் தொடருகின்றனர்.

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் தொடர்ச்சியாக 3 அரைசதங்கள் அடித்த இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் ஷபாலி வர்மா 4 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9-ல் இருந்து 10-வது இடத்துக்கு சரிந்தார்.

இதன் பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்திய ஆல்-ரவுண்டர் தீப்தி ஷர்மா முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலியாவின் அனபெல் சுதர்லாண்ட் 2-வது இடத்திலும், பாகிஸ்தானின் சாதியா இக்பால் 3-வது இடத்திலும் உள்ளனர். இலங்கைக்கு எதிரான 3-வது ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ரேணுகா சிங் 8 இடங்கள் எகிறி 6-வது இடத்தை தென்ஆப்பிரிக்காவின் மிலாபாவுடன் பகிர்ந்துள்ளார். இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீசரனி 17 இடங்கள் உயர்ந்து 52-வது இடத்தை பெற்றுள்ளார். இலங்கை தொடரில் அறிமுகம் ஆன இந்திய சுழற்பந்து வீச்சாளர் வைஷ்ணவி ஷர்மா 124-வது இடத்தை பிடித்துள்ளார்.

Tags:    

Similar News