பெண்கள் பிரீமியர் லீக்: இரண்டு முன்னணி ஆஸ்திரேலிய வீராங்கனைகள் விலகல்
- எலிஸ் பெர்ரி ஆர்சிபி அணியில் இடம் பிடித்திருந்தார்.
- சதர்லேண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார்.
4-வது பெண்கள் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நவி மும்பை மற்றும் வதோதராவில் ஜனவரி 9-ந்தேதி முதல் பிப்ரவரி 5-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
இத்தொடர் தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பிடித்திருந்த ஆஸ்திரேலியா வீராங்கனை எலிஸ் பெர்ரி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்திரந்த மற்றொரு ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னாபெல் சதர்லெண்டு ஆகியோர் சொந்த வேலை காரணமாக விலகியுள்ளனர்.
எலிஸ் பெர்ரிக்குப் பதிலாக இந்திய வீராங்கனை சயாலி சத்காரே ஆர்.சி.பி. அணியில் இணைவார் என்றும், சதர்லேண்டுக்குப் பதிலாக ஆஸ்திரேலியா லெக் ஸ்பினனர் அலானா கிங் டெல்லி அணியில் இணைவார் என்று பெண்கள் பிரீமியர் லீக் அறிவித்துள்ளது.
ஆர்.சி.பி. அணி ரூ. 30 லட்சத்திற்கு சயாலி சத்காரேவையும், டெல்லி அணி ரூ. 60 லட்சத்திற்கு அலானா கிங்கையும் ஒப்பந்தம் செய்துள்ளன.
உ.பி. வாரியார்ஸ் அணியில் சார்லி நாட்டிற்குப் பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் தாரா நோரிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவர் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை குவாலிபையருக்கான ஆஸ்திரேலியா அணியில் இடம் பிடித்துள்ளார்.