கிரிக்கெட் (Cricket)

பும்ராவின் அனுபவம் அணிக்கு அவசியம்: இந்திய கேப்டன் ரோகித் சர்மா கருத்து

Published On 2023-07-27 12:47 IST   |   Update On 2023-07-27 12:47:00 IST
  • உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக அணிக்கு அவர் திரும்புவார் என நாங்கள் நம்புகிறோம்.
  • தேசிய கிரிக்கெட் அகாடமியுடன் பும்ரா குறித்து பேசி வருகிறோம்.

பார்படாஸ்:

ரோகித் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதனையத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று பார்படாஸில் தொடங்குகிறது.

இந்நிலையில் பும்ராவின் அனுபவம் அணிக்கு மிகவும் அவசியம் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

பும்ராவின் அனுபவம் அணிக்கு மிகவும் அவசியம். அவர் மோசமான காயத்திலிருந்து மீண்டுள்ளார். மேலும் அணி இன்னும் அறிவிக்கப்படாததால் அவர் அயர்லாந்திற்கு செல்வாரா என்பது எனக்கு தெரியாது. அவர் விளையாடினால் அது நல்லது.

உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக அணிக்கு அவர் திரும்புவார் என நாங்கள் நம்புகிறோம். ஒரு வீரர் காயத்திலிருந்து மீண்டு அணிக்குள் திரும்பும் போது போட்டி சார்ந்து சில விஷயங்கள் முக்கியம். அதை அவர் விஷயத்தில் கருத்தில் கொள்ள வேண்டும். தேசிய கிரிக்கெட் அகாடமியுடன் இது குறித்து பேசி வருகிறோம். இப்போதைக்கு அவர் குறித்து வரும் தகவல் அனைத்தும் பாசிட்டிவாக உள்ளது.

என ரோகித் கூறினார்.

Tags:    

Similar News