கிரிக்கெட்

சாம்சன் அதிரடி: லக்னோ அணிக்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான்

Published On 2024-03-24 11:58 GMT   |   Update On 2024-03-24 11:58 GMT
  • லக்னோ அணி தரப்பில் நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுக்கெடுகளை கைப்பற்றினார்.
  • ராஜஸ்தான் வீரர் சாம்சன் 80 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் - லக்னோ அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக ஜெய்ஸ்வால் - ஜாஸ் பட்லர் களமிறங்கினர். பட்லர் 11 ரன்னிலும் ஜெய்ஸ்வால் 24 ரன்னிலும் அவுட் ஆகினர். இதனையடுத்து கேப்டன் சாம்சன் மற்றும் பராக் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம்சன் அரை சதம் விளாசினார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பராக் 29 பந்தில் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஹெட்மயர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. சாம்சன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் சேர்த்தார்.

Tags:    

Similar News