கிரிக்கெட் (Cricket)

சின்னசாமி மைதானத்தில் ஏ.ஐ. கேமராக்கள் பொருத்த ஆர்.சி.பி. பரிந்துரை

Published On 2026-01-16 16:11 IST   |   Update On 2026-01-16 16:11:00 IST
  • சின்னசாமி மைதானம் ஆர்சிபி-யின் சொந்த மைதானமாக திகழ்கிறது.
  • கடந்த ஆண்டு வெற்றி கொண்டாட்ட நிகழ்வின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB). இந்த அணி பெங்களூரு சின்னசாமி மைதானத்தை சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறது.

கடந்த வருடம் முதன்முறையாக ஆர்.சி.பி. அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது சின்னசாமி மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து இந்த வருடம் ஆர்சிபி அணிக்கு சின்னசாமி மைதானம் வழங்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் ரசிகர்கள் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக மைதானத்தில் 300 முதல் 350 ஏஐ கேமராக்கள் பொருத்த கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு ஆர்சிபி அணி முறையாக பரிந்துரை செய்துள்ளது. இதற்கான செலவு 4.5 கோடி ரூபாயை தாங்களே ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

ஆனால் போக்குவரத்து நெரிசல், ரசிகர்கள் பாதுகாப்பு ஆகிவற்றின் காரணமாக இந்த முறை போட்டியை நடத்த கர்நாடக அரசு அனுமதி வழங்குமா? என்பது சந்தேகம்தான்...

ஏஐ கேமராக்கள் மூலம் ரசிகர்கள் ஒரு இடத்தில் அதிகமாக கூட இருப்பதை அறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு கூட்ட நெரிசலை தடுக்க முடியும் என்பதால் ஆர்சிபி இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.

Tags:    

Similar News