கிரிக்கெட் (Cricket)

வார்னர் காலையில் சமன்செய்த சாதனை: மாலையில் பதிலடி தந்த ஸ்மித்

Published On 2026-01-17 00:50 IST   |   Update On 2026-01-17 00:50:00 IST
  • முதலில் பேட் செய்த சிட்னி தண்டர்ஸ் அணி 20 ஓவரில் 189 ரன்கள் குவித்தது.
  • அணியின் கேப்டன் டேவிட் வார்னர் சதமடித்து 110 ரன்கள் குவித்து அவுட்டாகாமல் இருந்தார்.

சிட்னி:

பிக்பாஷ் லீக் தொடர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த லீக் போட்டியில் சிட்னி சிக்சர்ஸ், சிட்னி தண்டர் ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற சிட்னி சிக்சர்ஸ் பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த சிட்னி தண்டர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 65 பந்தில் 110 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் பிக்பாஷ் லீக் தொடரில் அதிக சதமடித்தவர் என்ற சாதனையை சமன் செய்தார்.

அடுத்து ஆடிய சிட்னி சிக்சர்ஸ் அணி 17.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் ஸ்டீவன் ஸ்மித் 42 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.

இந்நிலையில், பிக்பாஷ் லீக் தொடரில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார் ஸ்டீவன் ஸ்மித். ஸ்மித் இதுவரை 4 சதங்கள் அடித்துள்ளார்.

டேவிட் வார்னர் 3 சதங்கள் அடித்து தனது சாதனையை சமன் செய்தவருக்கு மாலையில் ஸ்மித் சதமடித்து அந்த சாதனையை மீண்டும் தன்வசமாக்கினார்.

பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகிய இருவரும் தண்டனை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News